search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நமக்கு நாமே திட்டம்"

    • நமக்கு நாமே திட்டத்தில் புதிய ரேசன் கடை திறப்பு நடந்தது.
    • கருப்பையா, பூமிராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் குமாரபட்டி ஊராட்சியில் புதிய ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை கலெக்டர் ஆஷா அஜித் திறந்து வைத்தார்.

    சிவகங்கை ஒன்றியம் குமாரபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சூரியகலாராஜா கோரிக்கையை ஏற்று நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கிராம மக்கள் பங்களிப்போடு காராம்போடை கிராமத்தில் புதிய ரேஷன் கட்டிடம் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட் டுள்ளது.

    இதேபோல் டாமின் திட் டத்தின் கீழ் குமாரபட்டி கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் திறந்து வைத்தார். நிகழ்வில் திட்ட இயக்குனர் சிவராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநா–பன், உதவி செயற்பொறி–யாளர் மாணிக்கவாசகம், ஒன்றிய கவுன்சிலர் அழகர் சாமி, ஊராட்சி மன்ற துணை தலைவர் பாப்பா, ரேஷன் கடை பங்களிப்பு தந்த சுப்பையா, கருப்பையா, பூமிராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • நமக்கு நாமே திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கடந்த 1997-98-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தபட்டது.
    • 2007-2008-ம் ஆண்டு நமக்கு நாமே திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 2011-ம் ஆண்டு முடிய செயல்படுத்தப்பட்டது.

    சென்னை:

    மக்களின் சுய உதவி, சுய சார்பு எண்ணம் ஆகிய வற்றை வலிமைப்படுத்தவும் பரவலாக்கவும், மக்கள் பங்கேற்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கடந்த 1997-98-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு 2001-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது.

    அதன் பிறகு 2001-2002-ம் ஆண்டு கிராம தன்னிறைவு திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டு 2006-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. 2007-2008-ம் ஆண்டு நமக்கு நாமே திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 2011-ம் ஆண்டு முடிய செயல்படுத்தப்பட்டது.

    இப்போது மீண்டும் 2021-2022 முதல் நமக்கு நாமே திட்டம் ஊரகப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.100 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது. இதற்காக அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

    அதன்படி பள்ளிக் கட்டிடங்கள் கட்டுதல், காம்பவுண்டு சுவர் அமைத்தல், சமுதாய கூடம் கட்டுவது, மகளிர் விடுதிகள் கட்டுதல், ஊர் சந்திப்புகளில் கோபுர மின் விளக்குகள் அமைத்தல், பள்ளிக் கூடங்களில் கூடைப் பந்து, பூப்பந்து தளம் அமைத்தல், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருந்தகங்கள், நூலகம், சத்துணவு மையங்கள், சிறிய பாலங்கள், பூங்கா, விளையாட்டு மைதானம், உடற்பயிற்சிகூடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர்களின் அனுமதியுடன் செயல்படுத்தலாம்.

    இதற்காக அரசு விரிவாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    • பொதுமக்கள் பணிகளை தேர்வு செய்யலாம்
    • மொத்தம் ரூ.10.35 கோடி மதிப்பில் அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டன

    வேலூர்:

    தமிழகத்தில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே திட்டம் ஊரகப் பகுதிகளில் மீண்டும் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதன்படி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் செய்யப்பட்டது.

    இந்த நிதியாண்டில் 115 சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள், 10 கழிவுநீர் இணைப்பு பணிகள், 7 சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள், சாலைகளை சீரமைக்கும் பணிகள், 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2 கழிவுநீர் சிமெண்ட் கால்வாய்கள், 2 குடிநீர் குழாய் பணிகள், 2 பேருந்து நிழற்குடை பணிகள், 1 தார் சாலை, 1 பேவர் பிளாக் அமைக்கும் பணி, 1 அரசு பள்ளிக்கு மேஜை நாற்காலி கொள்முதல், 1 நியாய விலை கடை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.10.35 கோடி மதிப்பில் 147 திட்டப் பணிகள் மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டன.

    பணிகள் பல்வேறு நிலைகளில் செயலாக்கத்தில் உள்ளன. இதில் ரூ.8.07 கோடி நிதி அரசு பங்களிப்பாகவும், ரூ. 2.28 கோடி தனி நபர்கள், குழுக்கள், அமைப்புகள், வணிக நிறுவனங்கள் அல்லது உள்ளூர் மக்கள் பங்களிப்பாகவும் வழங்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தில் திட்டப்பணிகளை மேற்கொள்ள படுகின்றது.

    தனி நபர்கள், குழுக்கள், அமைப்புகள், வணிக நிறுவனங்கள் அல்லது உள்ளூர் மக்கள் தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நலத் திட்டப் பணிகளை தேர்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவலர்களை அணுகி தெரிவிக்கலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.

    • எம்பி, எம்.எல்.ஏ. பூஜை போட்டு தொடங்கி வைத்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா விஷமங்கலம் அருகே சித்தேரி கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ரூ.14 லட்சத்தில் கட்டும் பணிக்கு மக்கள் பங்களிப்புக்காக ரூ .2 லட்சத்து 80 ஆயிரத்தை சி.என்.அண்ணாதுரை தனது சொந்த செலவில் அரசுக்கு வழங்கினார்.அதனை ஒட்டி மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி சித்தேரி கிராமத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் ஹேமலதா வினோத்குமார் தலைமை வகித்தார் அனைவரையும் வட்டார வளர்ச்சி அலுவலர்‌ துரை வரவேற்றார், பூமி பூஜை கட்டும் பணியை திருவண்ணாமலை தொகுதி சி.என்.அண்ணாதுரை எம்பி, நல்லதம்பி எம்எல்ஏ, பூமி பூஜை போட்டு கட்டும் பணி தொடங்கி வைத்து பேசினர். இதில் ஒன்றிய செயலாளர்கள், கே. எஸ். ஏ.மோகன்ராஜ், கே எஸ். குணசேகரன், கே. முருகேசன், ஒன்றிய குழு தலைவர் திருமதி, துணைத் தலைவர் ஜி.மோகன்குமார், கூட்டுறவு சங்க தலைவர்கள், குலோத்துகன், ராஜா, சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி, உட்பட பலர் கலந்து கொண்டனர் இறுதியில் ஆர். தசரதன் நன்றி கூறினார்.

    இதேபோன்று ஆதி சக்தி நகரில் ஊராட்சி ஆரம்பப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் ரூ7.80 லட்சம் செலவிலும், ராவுத்தம்பட்டி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி ரூ 30 லட்சம் செலவில், ஆதியூர் ஆலமரத்து வட்டம் பகுதியில் தரைக்கற்கள் ரூ 8 லட்சம் செலவில் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் தலைமை வகித்தார்.

    அனைவரையும் துணை தலைவர் ஏ.பி பழனிவேல், வரவேற்றார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.

    பூமி பூஜை போட்டு பணிகளை சி.என்.அண்ணாதுரை எம்பி, ஏ. நல்லதம்பி எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் கே.ஏ. குணசேகரன், தொடங்கி வைத்து பேசினர்.நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபா, வக்கீல் மாது, அவைத் தலைவர் ஜெகதீசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் துவங்குவதற்கு அந்தந்த இடங்களில் பூமி பூஜை நடைபெற்றது.
    • திட்டப் பணிகளை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

    பல்லடம்,

    பல்லடம் நகராட்சி சார்பில், நமக்கு நாமே திட்டதின் கீழ் பல்லடம் டெக்ஸ்டைல் தொழில் கூட்டமைப்பு மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பங்களிப்புடன் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கூடுதல் சுகாதார வளாகம் கட்டுதல், பல்லடம் மந்தரகிரி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் பல்லடம் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்தல், பல்லடம் அறம் அறக்கட்டளை பங்களிப்புடன் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார வளாகம் கட்டுதல், பல்லடம் முருகன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் ராயர்பாளையம் நகராட்சி நடு நிலைப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் துவங்குவதற்கு அந்தந்த இடங்களில் பூமி பூஜை நடைபெற்றது.

    திட்டப் பணிகளை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் விநாயகம், சுகாதார ஆய்வாளர் சங்கர், பணி மேற்பார்வையாளர் ராசுக்குட்டி, நகராட்சி கவுன்சிலர்கள், நகர திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஜெமினி சண்முகம், மந்திரகிரி சிவக்குமார், அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், பெற்றோர், ஆசிரியர் சங்க தலைவர் நடராஜ், பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாடு மற்றும் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
    • 50 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் புதிய சாலை அமைக்கும் பணியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியம் மைலம்பாடி ஊராட்சி கரட்டுவலசு பகுதியில் கூடுதல் இயக்குநர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னை) சரவணன் மற்றும் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுபாலன் ஆகியோர் முன்னிலையில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாடு மற்றும் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பவானி ஊராட்சி ஒன்றியம் மைலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட கரட்டுவலசு பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வெள்ளித்திருப்பூர் சாலை முதல் கரட்டுவலசு சாலை வரை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினையும்,

    காந்தி நகர் காலனியில் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.43.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக கலெக்டர் சாலை அமைப்பதற்கு நிலம் வழங்கியவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் மைலம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சிவானந்தம், பவானி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரிமுத்து, சாந்தி மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×